வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பா.ஜனதாவினர் சாலை மறியல்; 240 பேர் கைது - செல்போன் கோபுரம் மீது ஏறியவரால் பரபரப்பு
வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கோரி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 240 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆயிரக்கணக்கான பா.ஜனதாவினர் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழக அரசு பா.ஜனதாவின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழியாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கோரியும் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தொண்டரான குருகணேஷ் என்பவர், திடீரென இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறி பா.ஜனதா கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தடையை மீறி சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 240 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக புதிய பஸ் நிலையத்தில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.