20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
20 சதவீத போனஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியாறு, நடுவட்டம், தேவாலா, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி மற்றும் குன்னூர், கோத்தகிரி தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த காரணத்தை காட்டி போனசை குறைக்கலாம் என்ற தகவல் பரவியது.
இதையடுத்து தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு உள்பட பல இடங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் நேற்று காலை 8 மணிக்கு டேன்டீ அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 20 சதவீத போனஸ் வழங்க கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் வழக்கம் போல வேலைக்கு சென்றனர்.