வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2½ கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு
வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.
மதுரை,
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக பந்தல்குடி வாய்க்காலில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியினை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பந்தல்குடி வாய்க்காலில், 5 வார்டுகளில் பயன்படுத்தப்படும் சுமார் 1 லட்சம் லிட்டர் கழிவுநீரும், செல்லூர் கண்மாயில் இருந்து நிரம்பி வரும் நீர், ஆனையூர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் பந்தல்குடி வாய்க்காலை ஒட்டி தாழ்வான குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் பந்தல்குடி வாய்க்காலின் வழியாக வைகை ஆற்றில் கலக்கின்றது.
இதனை தடுக்கும் வகையில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் நீரானது பூங்காக்கள் பயன்பாட்டிற்கும், மீதமுள்ள நீர் பந்தல்குடி வாய்க்கால் மூலம் வைகை ஆற்றில் விடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கட்டுமான பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். வருகிற சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் சுவாமி எழுந்தருளும்போது தூய்மையான சுத்தமான வைகை ஆற்று தண்ணீரில் இறங்கும் நிகழ்ச்சி இனி நடைபெறும்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் தங்குதடையின்றி குடிநீர் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் கிடைக்கும். இந்த திட்டப்பணிகளுக்கான அனைத்து டெண்டர்களும் விடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி கொரோனா காலத்திலும் அனைத்து அரசின் திட்டங்களை அமைச்சர்கள் மக்களுக்கு கொண்டு சென்றனர். மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.