திருவாரூரில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-11-05 02:03 GMT
திருவாரூர், 

மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டும். மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். துணை மின் நிலைய பராமரிப்பு பணியினை தனியாரிடம் விடக்கூடாது. பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பொறியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என அனைவருக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கணக்காயர் கள தொழிலாளர் சங்க திட்ட செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யூ. திட்ட செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் கூட்டமைப்பின் திட்ட செயலாளர் முருக அருள், ஐக்கிய சங்க திட்ட தலைவர் பாஸ்கரன், தொ.மு.ச. திட்ட செயலாளர் ஜான்பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார், பொறியாளர் சங்கத்தின் மண்டல செயலாளர் சம்பத்குமார், தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்