கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2020-11-04 22:00 GMT
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு (வயது 20). இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 30-ந்தேதி சோமங்கலம் அடுத்த தர்காஸ் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அபிஷேக்கை வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் ராஜகோபால் கண்டிகையை சேர்ந்த சச்சின் (20), ராஜ்குமார் (19), பம்மல் பகுதியை சேர்ந்த மதன் (20) ஆகியோர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் செய்திகள்