திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் - மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
அதன்படி திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளில் பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தலா 25 பேர் வீதம் 138 பூத்களுக்கு 3 ஆயிரத்து 450 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்து வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களையும் அரசு முழுமையாக நிறைவேற்றி வருகின்றன. படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். அ.தி.மு.க. அரசின் சாதனைகள் புதிய திட்டங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறியும் சமூக நலத்திட்டங்களை மக்கள் பெறுகின்ற வகையில் உறுதுணையாக பாசறை நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக மாற்ற வேண்டும். முதல்-அமைச்சர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்கு பாசறை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் முழுமையாக பாடுபடவேண்டும் என்றார்.
நிகழ்ச்சிகளில் திருவண்ணாமலை நகர செயலாளர் ஜே.செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் தொப்புளான், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் சித்த வைத்தியர் பழனி மற்றும் வட்ட செயலாளர்கள், பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.