தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கக்கோரி ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

சாலைகளை சீரமைக்கக்கோரி ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-11-04 05:43 GMT
ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் மற்றும் அரூர் முதல் வாணியம்பாடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் வக்கீல் மூர்த்தி, நகர செயலாளர் மணிவண்ணன், முன்னாள் நகர செயலாளர் குமரேசன், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ஹரிதாஸ் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் வெள்ளி அரசு, குமரேசன், சக்திவேல், கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ், சஞ்சீவி காந்தி ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் கவியரசு, ராஜமாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தாசில்தார் தண்டபாணியிடம் அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மேலும் செய்திகள்