கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-11-04 01:05 GMT
கரூர், 

10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டதை கண்டித்தும், பண்டிகை கால முன்பணம் வழங்கக்கோரியும் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கெம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் தலைவர் பாலன், சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்