திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்றது. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி துரைக்கண்ணு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலாசுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.சிவாஜி, சி.எம்.மணிகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், டாக்டர் வாசுதேவன், அரசு வக்கீல் ரமேஷ், தம்பாகிருஷ்ணன், வீடியோ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அமைச்சர் துரைக்கண்ணு படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.