கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது.

Update: 2020-11-01 22:50 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 8 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,385 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,974 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 162 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

290 பேருக்கு பரிசோதனை

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,145 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,082 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 290 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்