ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக சாலமன்ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திருநாவுக்கரசு திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கும், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சாலமன்ராஜா ராணிப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக சாலமன்ராஜா பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.