தென்காசி மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா

தென்காசி மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.

Update: 2020-11-01 01:58 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி மலையான் தெரு, கீழப்புலியூர் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி நகர அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர் சுடலை, குற்றாலம் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சாமிநாத பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தி.மு.க. சார்பில் மலையான் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்-பா.ஜனதா

தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமையில் காங்கிரசார் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜனதாவினர் மாவட்ட தலைவர் ராமராஜர் தலைமையிலும், சமத்துவ மக்கள் கழகத்தினர் மாவட்ட செயலாளர் லூர்துநாடார் தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேவர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில் மேலக்கடையநல்லூர் கீழப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், இணை செயலாளர் சுமதி கண்ணன், துணை செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலைக்கு மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மூலிகை மருந்து வழங்கப்பட்டது. உயர்நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி

சிவகிரியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தி.மு.க. சார்பில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், கலை பகுத்தறிவு துணை அமைப்பாளர் நல்லசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இணை செயலாளர் சுமதி கண்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மகேசுவரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர்

கடையநல்லூர் கீழப்பாளையம், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் சந்தனத்தால் அமைக்கப்பட்ட தேவர் சிலைகளுக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்