திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட முதல் உந்துசக்தி ரெயில் என்ஜின் வழியனுப்பி வைப்பு

பொன்மலை பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் என்ஜின் வழியனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-11-01 01:03 GMT
திருச்சி, 

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மண்டல ரெயில்வேக்களின் என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு, தொடர் சேவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு மாதிரி என்ஜின் மட்டும் பராமரிப்பு செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக மாதம் 12 என்ஜின்கள் வரை பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது டீசல் என்ஜின்களின் பயன்பாடு குறைந்து வருவதால் பொன்மலை பணிமனையின் டீசல் பிரிவு அதன் பணிகளை பல்நோக்கு உடையதாக மாற்றி வருகிறது. தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டத்தில் டெமு வகை ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவை தொடர் பராமரிப்பு பணிகளுக்காக இதுவரை சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் லோகோ பணிமனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

வழியனுப்பு விழா

இந்தநிலையில் முதன்முறையாக உந்துசக்தி (டெமு) ரெயில் என்ஜின் கடந்த செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக பொன்மலை பணிமனைக்கு வந்தது. இந்த புதிய பணிக்காக பொன்மலை பணிமனையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. அனைத்து மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைகள் பணியாளர்களை ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன.

டிரைவர் கேபினில் உள்ள மின் விளக்குகள் மற்றும் காற்றாடி போன்றவை புதிய வகை மின்னும் தொழில்நுட்பம் கொண்டு மாற்றம் செய்யப்பட்டது. வண்டியில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டது. வெளிப்புறத் தோற்றம் புதிய வண்ணத்தில் மெருகேற்றப்பட்டு உள்ளது. நாய்த் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட ரெயில் என்ஜினை நேற்று பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் சியாம்ந்தர் ராம் பொன்மலை பணிமனையில் இருந்து கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்