சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

சோமங்கலம் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-11-01 00:36 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு (வயது 20), இவர் சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோமங்கலம் அடுத்த தர்காஸ் பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அபிஷேக்கை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணம் முன் விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்