செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-11-01 00:33 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 41 ஆயிரத்து 948 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்தது. 1,032 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 37 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 281 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 948 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 622 பேர் கொரானா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 20, 19 வயதுடைய ஆண்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 85 வயது முதியவர், எழிச்சூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்தது. 494 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்