காலியாகும் தனியார் ஆஸ்பத்திரிகள்: கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது
புதுவையில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 105 பேருக்கு தொற்று உறுதியானது. 147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2 நாட்களாக ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 8 ஆயிரத்து 629 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 3 பேருக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. 35 ஆயிரத்து 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 3 ஆயிரத்து 697 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,623 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 74 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆயிரத்து 724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 592 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுச்சேரியில் 488 பேரும், காரைக்காலில் 55 பேரும், ஏனாமில் 42 பேரும், மாகியில் 7 பேரும் இறந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.69 சதவீதமாகவும், குணமடைவது 87.75 சதவீதமாகவும் உள்ளது.
புதுவையில் கொரோனா பாதிப்பு முன்பு அதிகமாக இருந்ததால் அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 200 நோயாளிகள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருந்தார். இதன்காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்படாததால் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. மேலும் மிகவும் குறைந்த அளவிலேயே தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நோயாளிகள் உள்ளனர்.
அதாவது பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14 பேரும், லட்சுமிநாராயணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 பேரும், மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 11 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.