முன்னாள் துணை-முதல் மந்திரியின் அண்ணன் மகள் என்று கூறி வங்கியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி - பெண் கைது
முன்னாள் துணை முதல்-மந்திரியின் அண்ணன் மகள் என்று கூறி, வங்கியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்தவர் யோகேஷ்(வயது 36). கார் டிரைவர். இவருக்கும் மைசூருவை சேர்ந்த பல்லவி(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் யோகேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பல்லவி, சுற்றுலா செல்ல வேண்டும் உங்களது காரை எடுத்து கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி யோகேசும் காரை எடுத்து கொண்டு மைசூருவுக்கு சென்று உள்ளார். பின்னர் காரில் பல்லவி கர்நாடகத்தில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து உள்ளார். இதற்கு வாடகையாக ரூ.4 லட்சம் ஆகி உள்ளது. இந்த நிலையில் காருக்கான வாடகை பணம் ரூ.4 லட்சத்தை தரும்படி யோகேஷ், பல்லவியிடம் கேட்டு உள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய பல்லவி, பணத்திற்கு பதிலாக உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று யோகேசிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு யோகேஷ் மறுத்து விட்டதாக தெரிகிறது.
அப்போது என்னை திருமணம் செய்யாவிட்டால் என்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிப்பேன் என்று யோகேசை, பல்லவி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் அண்ணன் மகள் நான். என்னிடம் வைத்து கொண்டால் பிரச்சினையாகி விடும் என்றும் யோகேசை, பல்லவி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் பல்லவியின் பேச்சில் சந்தேகம் அடைந்த யோகேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பரமேஸ்வரின் வீட்டிற்கு பல்லவியை அழைத்து சென்று உள்ளார். ஆனால் அங்கு இருந்த பரமேஸ்வரின் உறவினர்கள் பல்லவியை யார் என்றே தெரியாது என்று சொல்லி விட்டனர். இதையடுத்து பல்லவி மீது ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் யோகேஷ் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் பல்லவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பரமேஸ்வரின் அண்ணன் மகள் என்று கூறி கொண்டு பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற்று தருவதாக பலரிடம் பணம் வாங்கி பல்லவி மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.