நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பின்புறத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டு வதற்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து அங்கு கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த கட்டுமான பணிகளை நாமக்கல்லை சேர்ந்த தனி யார் கட்டுமான நிறுவனத்தி னர் மேற்கொண்டு வருகின்ற னர். நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் நேற்று காலை அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தின் முன்புற நுழைவுவாயிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.
அப்போது கட்டுமான பணிக்காக அமைக்கப் பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. மேலும் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும், அவர்கள் தனியார் ஆஸ் பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு இருப்ப தாகவும் தகவல் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்த தும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் அங்கு சென்று நேரில் பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.
அப்போது அவர்களிடம், அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில் விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும், சாரத்தில் இருந்த கம்பியில் வெல்டிங் விட்டுவிட்ட காரணத்தால் அதை தாங்களாகவே முன்வந்து இடித்துவிட்டதாகவும் கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.