கோரிமேடு காவலர் மைதானத்தில் பயிற்சி: புதுவையில் போலீஸ் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள்

புதுவை கோரிமேடு காவலர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு போலீஸ் தேர்வில் பங்கேற்க இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

Update: 2020-10-29 00:27 GMT
புதுச்சேரி,

புதுவையில் காலியாக உள்ள 431 போலீஸ் பணியிடங்களை நிரப்பிட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் போலீஸ் தேர்வு நடத்தப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த சிலநாட்களுக்கு முன் தலைமை செயலாளர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி உடல்தகுதி தேர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் தேர்வு நடப்பதால் இந்த பணியில் சேர இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி காவலர் பணிக்கு 13 ஆயிரத்து 951 பேரும், ரேடியோ டெக்னீசியன் பணிக்கு 229 பேரும், டெக்ஷோண்டலர் பணிக்கு 588 பேரும் உடல் தகுதி தேர்வை சந்திக்க உள்ளனர்.

இதற்காக அவர்கள் கடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாள்தோறும் அதிகாலை முதலே கோரிமேடு போலீஸ் மைதானம் களைகட்டி வருகிறது.

மேலும் செய்திகள்