கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பது மக்களுக்கு தெரியும் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக கடைசி மூச்சு வரை போராடுவேன் தேவேகவுடா பேட்டி
கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்றும் தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு இன்று (நேற்று) தேர்தல் நடக்கிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேற்கு பட்டதாரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி நான் சிரா தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். மீண்டும் இன்னொரு சுற்று பிரசாரத்தை அந்த தொகுதியில் மேற்கொள்ள உள்ளேன். நாங்கள் யாருக்கு எதிராகவும் சவால் விடவில்லை.
கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்காக நான் கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன். மாநில கட்சியாக உள்ள ஜனதா தளம் இந்த நாட்டையே ஆட்சி செய்தது. தலைவர்களின் கருத்து வேறுபாட்டால் ஜனதா தளம் கட்சி உடைந்து பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாக செயல்படுகிறது. கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) என்ற பெயரில் நாங்கள் கட்சியை நடத்துகிறோம். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஒழிந்துவிடும் என்று சிலர் சொல்கிறார்கள்.
அவ்வாறு சொல்கிறவர்கள், இந்த கட்சியில் இருந்து பதவி, அதிகாரத்தை அனுபவித்து சென்றவர்கள். இவர்களின் கருத்தால் எனக்கு சிறிது வருத்தம் ஏற்பட்டது. நிகில் குமாரசாமி அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்து வருகிறார். எங்கள் கட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பெங்களூருவில் கனமழை பெய்து, சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. ராஜகாவ்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதனால் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்பில் அரசியல்வாதிகள் சிலரும் இருக்கலாம். ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். ஏரிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத்துவம் கொடுத்தேன். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபடுகின்றன. இதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். 16 எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பியது யார் என்பதை அந்த எம்.எல்.ஏ.க்களே கூறியுள்ளனர். சிரா தொகுதியில் பா.ஜனதாவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. டி.கே.சிவக்குமார் சாதி அரசியல் குறித்து பேசுகிறார். இது புதியது ஒன்றும் இல்லை. சாதி அரசியல் குறித்து யாரும் பேசக்கூடாது. வளர்ச்சி பற்றி பேச வேண்டும். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.