புதுச்சேரியில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டிய நிலையில் தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வந்தனர். உயிர்ப்பலியும் அதிகரித்தது. தொற்று பரிசோதனை எண்ணிக்கையும் அதிக அளவில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிப்பு குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 108 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் பலியாகி உள்ளார்.
வீடுகளில் தனிமை
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 656 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 33 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 152 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,515 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 637 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இதுவரை 28 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளனர். 575 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 477 பேர் புதுச்சேரியையும், 52 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு என்பது 1.73 சதவீதமாகவும், குணமடைவது 85.78 சதவீதமாகவும் உள்ளது.