தூத்துக்குடியில் சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது.

Update: 2020-10-18 18:35 GMT
தூத்துக்குடி,

பல்வேறு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுப்புற சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடியில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு

இந்த பேரணியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன், செயற்பொறியாளர் சேர்மகனி உள்பட அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு சைக்கிளில் ஓட்டிச் சென்றனர். மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும் சைக்கிள் பயணத்தின், பலன்களை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாகவும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.

சைக்கிள் பேரணி பாளையங்கோட்டை ரோடு, பழைய மாநகராட்சி சாலை, வடக்கு ரதவீதி, மற்றும் பாலவிநாயகர் கோவில் தெரு வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது.

மேலும் செய்திகள்