பள்ளிகள் திறக்கப்படுவது தாமதம்: ஆன்-லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு தலைவலி நோய் பாதிப்பு - கண் கண்ணாடி விற்பனை அதிகரிப்பு
பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாவதால் ஆன்-லைன் வகுப்பால் மாணவர்களுக்கு தலைவலி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண் கண்ணாடி விற்பனைகள் அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கல்வியாண்டாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா எனும் கொடிய வைரசால் இந்த கல்வியாண்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் வகுப்புகள் என்பது முறைப்படி இன்னும் வகுப்பறையில் தொடங்கப்படவில்லை. ஆன்-லைன் மூலம் தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தொடக்ககல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்கள் தங்களது வீடுகளில் செல்போன் மற்றும் மடிக்கணினி, கையடக்க கணினி மூலம் ஆன்-லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் ஆன்-லைன் வகுப்பை கவனித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவர்களுக்கு தலைவலி நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து செல்போன் அல்லது மடிக்கணினி, கையடக்க கணினியை பார்த்து வருவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு கண்களை பாதிக்க செய்கிறது. இதில் சிலருக்கு தலைவலி ஏற்பட்டு வருகிறது. இதனை பெற்றோரிடம் மாணவர்கள் கூறும் போது, அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏற்கனவே ஆன்-லைன் வகுப்பிற்காக பலரது வீடுகளில் புதிதாக ஸ்மார்ட் போன்கள் வாங்கி கொடுத்தவர்கள் உண்டு. தற்போது தங்களது குழந்தைகளின் நலனுக்காக கண் பார்வை பாதிக்காமல் இருக்க கண் கண்ணாடிகளை வாங்கி கொடுக்க தொடங்கி உள்ளனர்.
புதுக்கோட்டையில் ஆப்டிக்கல்ஸ் கண்ணாடி கடையில் மாணவர்களுக்காக கண் கண்ணாடி வாங்க வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது போன்று வருபவர்களுக்கு பார்வை திறனில் எந்த பாதிப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களில் ஆன்-லைன் வகுப்பை கவனிக்க மட்டும் பவர் இல்லாத கண் கண்ணாடியை விற்று வருகின்றனர்.
குறைந்த பட்சம் ரூ.500 முதல் இந்த கண் கண்ணாடி விற்பனையாகுகிறது. பார்வையில் சற்று குறைகள் எதுவும் இருந்தால் அதற்கேற்ப லென்ஸ் பொருத்தப்பட்ட கண் கண்ணாடியை அணிய அறிவுறுத்தி வருகின்றனர். இதனை மாணவர்களின் பெற்றோர் வாங்கி செல்கின்றனர்.