அ.தி.மு.க.வின் அரசியல் நகர்வுகளில் பெரும்பங்கு: ‘சசிகலாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்’ முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க.வின் அரசியல் நகர்வுகளில் பெரும் பங்காற்றிய சசிகலாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எப்போதும் உறுதுணையாக இருக்கும் என கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாரநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் பதாகை மர்மநபர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது. அதனை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது.
முத்துராமலிங்க தேவர் உருவப்படம் தாங்கிய பதாகை சேதமடைந்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்குலத்தோர் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக இருந்தாலும் திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது.
ஆனால் தற்போது உள்ள முக்குலத்து இளைஞர்கள் தங்களுக்கென தனி தலைமையும், அங்கீகாரமும் வேண்டும் என விரும்புகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதா?, தனி சின்னத்தில் போட்டியிடுவதா? என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்.
அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜெயலலிதா கள்ளர், மறவர், அகமுடையோரை ஒருங்கிணைத்து தேவர் என்று வெளியிட்ட அந்த அரசாணையை மத்திய, மாநில அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தி, உள் இட ஒதுக்கீட்டை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடம் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்த உள்ளது.
எந்த சூழ்நிலையிலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படமாட்டாது, எந்த ஒரு அரசியல் அமைப்புடனும் இணைக்கப்படமாட்டாது. முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக போராட எங்கள் அமைப்பு உறுதுணையாக இருக்கும். மேலும் நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நீதியரசர்கள் விலகிய நிலையில், புதிதாக நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல் மனசாட்சியின் படி நீதிமன்ற உத்தரவின்பேரில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் நீண்டநாள் உடனிருந்து அ.தி.மு.க.வின் அனைத்து அரசியல் நகர்வுகளிலும் முக்கிய பங்காற்றியவர் சசிகலா. இது நாடறிந்த உண்மை. ஆனாலும் அவர்களின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது.
முக்குலத்தோர் அமைப்பை சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். குடிமராமத்து போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அ.தி.மு.க. மீது பத்தாண்டுகள் எந்த ஒரு வெறுப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மண்டல ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.