மராட்டியத்தில் புதிதாக 8 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா 187 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் புதிதாக 8 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 187 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 8 ஆயிரத்து 522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2-வது நாளாக மாநிலத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தைவிட குறைந்து இருப்பது பொது மக்கள் இடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலத்தில் இதுவரை 15 லட்சத்து 43 ஆயிரத்து 837 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 252 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்து 356 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் புதிதாக 187 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 701 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை
மாநிலத்தை போல கடந்த 2 நாட்களாக தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு குறைந்து உள்ளது. நகரில் நேற்று புதிதாக 1,325 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மும்பையில் இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 391 பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மேலும் 38 பேர் பாதிப்புக்கு பலியானதால் இதுவரை நகரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 507 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல தானே மாநகராட்சியில் 229 பேருக்கும், நவிமும்பையில் 200 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 173 பேருக்கும், மிராபயந்தரில் 140 பேருக்கும், புனே மாநகராட்சியில் 490 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.