மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் 173 பேர் கைது
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 173 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3 இடங்களில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி 4 ரோடு சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, தொழிற்சங்க நிர்வாகி மணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து கோஷங் கள் எழுப்பினார்கள்.
இதேபோல் அரூர் கச்சேரிமேடு ரவுண்டாணாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், கமலாமூர்த்தி, நிர்வாகிகள் அல்லிமுத்து, சுப்பிரமணி, முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் நடந்த மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியப்பன், நிர்வாகிகள் காதர், விஜயபாரதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம், மின்சார திருத்த சட்டம், புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதை உடனே நிறுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத்தில் 3 இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 173 பேரை போலீசார் கைது செய்தனர்.