நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

நாகை மாவட்டத்தில் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-12 23:47 GMT
நாகப்பட்டினம்,

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாகை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அமல் படுத்தக்கூடாது. தேசியக்கல்வி கொள்கையை திரும்பப்பெற வேண்டும். உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமையை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கீழ்வேளூர்

இதேபோல் கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், நிர்வாகிகள் முருகையன், சிவசாமி, வசந்தா, அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். அப்போது மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர்.

கீழையூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதல் ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாக்குழு உறுப்பினர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போலகம் ஊராட்சி, திருமருகல்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் கே.பி. மார்க்ஸ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

திருமருகல் தபால் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாபுஜீ தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி கலந்து கொண்டு பேசினார். முடிவில் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்