ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் ஒரு முதியவர் பலியானார்.

Update: 2020-10-12 23:31 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று வெளியான மாநில சுகாதாரத்துறை பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 426 ஆக உயர்ந்தது.

கோபியை சேர்ந்த முதியவர்

கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 155 பேர் குணமடைந்தார்கள். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 231 ஆக உயர்ந்தது. மேலும், 1,093 பேர் சிகிச்சை பெற்று வருகிறார் கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 101 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு முதியவர் இறந்தார். கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவரான அவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்