ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தோட்டக்கலை பண்ணை அரசு முதன்மை செயலாளர் பார்வையிட்டார்
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பண்ணையை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேரில் ஆய்வு செய்தார்.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலாந்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரித்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் பயன்பாடற்ற நிலையிலுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 1000 குறுங்காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறுங்காடும் சராசரியாக ½ முதல் 1½ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்திடும் நோக்கில் நடப்பாண்டில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பண்ணையும் 3 முதல் 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைகளில் காய்கறிகள், மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள், காளான் வளர்ப்பு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு, கால்நடைகளுக்கான அசோலா தீவன வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருங்கிணைத்து சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பரிச்சாத்திய முறையில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரி தோட்டக்கலை பண்ணைகளை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள பல்நோக்கு புயல் காப்பக கட்டிடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.புயல் காப்பக கட்டிடத்தை தயார் நிலையில் வைத்திடவும், புயல் காப்பகத்தில் உள்ள ஜெனரேட்டர், மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பராமரித்து அதன் செயல்பாடுகளை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் உத்தரவிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகநாதன், நடராஜன், உதவி பொறியாளர் அருண்பிரசாத் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.