கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

Update: 2020-10-11 21:50 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 9 ஆயிரத்து 523 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்து 309 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 9,891 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 75 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 966 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. புதிதாக பாகல்கோட்டையில் 129 பேர், பல்லாரியில் 226 பேர், பெலகாவியில் 331 பேர், பெங்களூரு புறநகரில் 155 பேர், பெங்களூரு நகரில் 4,623 பேர், பீதரில் 19 பேர், சாம்ராஜ்நகரில் 65 பேர், சிக்பள்ளாப்பூரில் 55 பேர், சிக்கமகளூருவில் 186 பேர், சித்ரதுர்காவில் 378 பேர், தட்சிண கன்னடாவில் 265 பேர், தாவணகெரேயில் 122 பேர், தார்வாரில் 188 பேர், கதக்கில் 60 பேர், ஹாசனில் 463 பேர், ஹாவேரியில் 57 பேர், கலபுரகியில் 81 பேர், குடகில் 40 பேர், கோலாரில் 172 பேர், கொப்பலில் 48 பேர், மண்டியாவில் 267 பேர், மைசூருவில் 541 பேர், ராய்ச்சூரில் 62 பேர், ராமநகரில் 24 பேர், சிவமொக்காவில் 130 பேர், துமகூருவில் 285 பேர், உடுப்பியில் 171 பேர், உத்தர கன்னடாவில் 115 பேர், விஜயாப்புராவில் 165 பேர், யாதகிரியில் 100 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

99 ஆயிரம் பேருக்கு சோதனை

புதிதாக பெங்களூரு நகரில் 24 பேர், மைசூருவில் 11 பேர், கோலாரில் 7 பேர் உள்பட 75 பேர் இறந்தனர். நேற்று 10 ஆயிரத்து 107 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 54 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரத்து 270 பேர் சிகிச்சையில் உள்ளனர். 904 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 99 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும் செய்திகள்