அபிஷேகப்பாக்கத்தில் ஆதிதிராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
அபிஷேகப்பாக்கத்தில் ஆதிதிராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
பாகூர்,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்-மந்திரி பதவி விலகக்கோரியும் புதுவை மாநில ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் கூட்டமைப்பு தலைவர் ரோக.அருள்தாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கலைமணி, துணைத் தலைவர் இளங்கோ, தலைமை நிலைய செயலர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் முத்துகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் பழனிவேல், அமைப்பாளர் ரஞ்சித், நகர தலைவர் ஆதிகேசவன், மாநில செயலாளர்கள் கண்ணன், பாவேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உத்தரபிரதேச முதல்-மந்திரியை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் நன்றி கூறினார்.