பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து திருவாரூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-10-04 15:15 GMT
திருவாரூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் இளம் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மாதர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட தலைவர் சுலக்சனா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, மாநிலக்குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, பூபதி, தேவிகா, நகர நிர்வாகி அன்னபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உத்தரபிரதேச முதல்வர் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்