வேப்பேரியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை; வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை

வேப்பேரியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Update: 2020-10-04 00:00 GMT
சென்னை,

சென்னை புரசைவாக்கம், வேப்பேரி, சூளை ஆகிய இடங்களில் ‘பீக்’ அவர் எனப்படும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பாண்டிவேலு தலைமையில் போலீசார் களம் இறங்கி உள்ளனர். அதன்படி வேப்பேரியில் சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை நிறுத்தும் குடியிருப்புவாசிகளிடம், இனிமேல் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

வேப்பேரியில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வரும் இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தி வைப்பதும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைகிறது. எனவே அங்கு நேற்று காலை விளையாடியவர்களை இன்ஸ்பெக்டர் கே.பாண்டிவேலு அழைத்து, ‘போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. மீறி நிறுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும்’ என்று அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார். போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்