கிராம சபை கூட்டம் ரத்து: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இதனால்தான் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்று கூறி நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி தலைமையில் விவசாய சங்கத்தினரும், பல்வேறு அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார தலைவர் நிலவு குப்புசாமி, வட்டார செயலாளர் ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.