கொரோனா தொற்றுக்கு தந்தை பாதிப்பு: மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 52). இவரது மகள் சிவபால நீலாவதி (23). முத்துக்கருப்பனுக்கு கடந்த 24-ந் தேதியன்று கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துக்கருப்பனை மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனமுடைந்த சிவபால நீலாவதி அழுது புலம்பி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிவபால நீலாவதி மனம் தாங்காமல் தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.