தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது. தஞ்சை ரெயிலடியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் கோவிந்தராவ் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் காந்திஜிசாலை, அண்ணாசாலை, தெற்குஅலங்கம் வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலத்திற்கு முன்பு சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முன்னதாக கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்களை அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் இதுவரை 9 லட்சம் முக கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாத காரணத்திற்காக 11 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், செயற்பொறியாளர் ராஜகுமாரன், கண்காணிப்பாளர் கிளமெண்ட், தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விரைவு பஸ்சில் ஏறிய கலெக்டர் பயணிகளுக்கு துண்டுபிரசுரம் வினியோகம்
ஊர்வலத்தை தொடங்கி வைத்த கலெக்டர் கோவிந்தராவ், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், டீக்கடைகள், பழக்கடைகளுக்கு நேரில் சென்று முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார். மேலும் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கிய அவர், முக கவசம் அணியாமல் வருபவர்களை கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.
தஞ்சை விரைவு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற கலெக்டர், டிரைவர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து பயணிகளிடம் விளக்கி கூற வேண்டும் என தெரிவித்தார். அப்போது சென்னைக்கு செல்வதற்கு தயாராக நின்ற பஸ்சில் ஏறிய அவர், பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்கிறார்களா? என பார்வையிட்டார். பின்னர் பயணிகளுக்கு கொரோனா தொற்று விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தார்.