மந்தைவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களை வெளியேற்ற தடை - ஐகோர்ட்டு உத்தரவு

மந்தைவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களை வெளியேற்ற தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-02 00:00 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் பெண்ணுரிமை இயக்கம் தாக்கல் செய்த மனுவில், ‘மந்தைவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது அங்கு 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் எந்தவித நோட்டீசும் கொடுக்காமல் அங்கு குடியிருந்து வருபவர்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே, அங்கு வசித்து வருபவர்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மந்தைவெளி குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்களை வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்