வடகர்நாடகத்தில் தொடர் கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். மேலும் மாட்டுவண்டியுடன் 4 பேர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
பாகல்கோட்டை, கொப்பல், பல்லாரி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பாகல்கோட்டை மாவட்டத்தில் பாதாமி, முதோல், உனகுந்து, இனகல், ஜமகண்டி, பீலகி, மகாலிங்கபுரா ஆகிய தாலுகாக்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழைக்கு இனகல் தாலுகா இரகெரே கிராமத்தில் 5 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுபோல் கே.கொப்பா கிராமத்திலும் 5 வீடுகள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டதுடன், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர்.
மாட்டு வண்டியுடன் 4 பேர்...
மேலும் கொப்பல் தாலுகா பைராப்புரா கிராமத்தில் பெய்த கனமழைக்கு அந்த கிராமத்தில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று அந்த பாலத்தை ஒரு டிராக்டர் கடந்து சென்றது.
அப்போது அந்த டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கவிழ்ந்தது. இதில் டிராக்டர் டிரைவர் ஆற்றில் நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர் மீட்கப்பட்டது. இதுபோல ராய்ச்சூர் அருகே பச்சலட்னி பகுதியில் ஓடும் ஆற்றில் கனமழைக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நேற்று அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தில் ஒரு மாட்டுவண்டியில் ஒரு பெண் உள்பட 4 பேர் சென்றனர். அப்போது ஆற்றுவெள்ளத்தில் மாட்டு வண்டி சிக்கியது. இதனால் பெண் உள்பட 4 பேரும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 4 பேரையும், 2 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் சிருகுப்பா தாலுகா ராராவி கிராமம், கர்நாடக-ஆந்திரா எல்லையில் உள்ளது. ராராவி கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்த பலம் கடந்த சில ஆண்டுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது அங்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஆற்றில் நேற்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ராராவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆந்திரா செல்ல ஆற்றில் கயிறு கட்டி சென்று வருகிறார்கள். ஆபத்தை உணராமல் அவர்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆந்திராவுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வெள்ளத்திலும் ஆற்றை கடந்து பொதுமக்கள் சென்று வருகிறார்கள். தொடர் கனமழையால் கதக் மாவட்டம் பூதிகால் கிராமத்திலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர் கனமழையால் வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.