ராகுல் காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மும்பை, தானே, நாக்பூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-01 21:02 GMT
மும்பை,

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மும்பை, தானே, நாக்பூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் உள்ள மந்திராலயா (தலைமை செயலகம்) அருகில் உள்ள காந்தி சிலை முன் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் பாலா சாகேப் தோரட், மந்திரிகள் சாதிஜ் பாட்டீல், அமித் தேஷ்முக், அஸ்லாம் சேக், வர்ஷா கெய்க்வாட், ஏக்னாத் கெய்க்வாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது பாலா சாகேப் தோரட் கூறுகையில், “உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி நடக்கிறது என்பது நிருபணமாகி உள்ளது. உத்தரபிரதேச அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறது. எனவே ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் செய்திகள்