கொள்ளிடம் அருகே, புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
கொள்ளிடம் அருகே புதுப்பெண் கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 30). டீக்கடை வைத்துள்ளார். இவருக்கும், ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா(25) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ரஞ்சிதாவின் அண்ணன் வீரமணி, தனது சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜேசை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.