திண்டுக்கல் ஒன்றியத்தில் ரூ.7 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பபட்டி, ம.மு.கோவிலூர், வன்னியபட்டி, பெரியகோட்டை, நடுப்பட்டி உள்பட 11 ஊராட்சிகளில் ரூ.7 கோடியே 17 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக் கான அடிக்கல் நாட்டுவிழா, பூமி பூஜை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தடையின்றி நடந்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ம.மு.கோவிலூரில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 68 ஆயிரத்தில் கழிவுநீர் வாய்க் கால், சிமெண்டு சாலை, ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட 14 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பூமிபூஜையும் தற்போது நடந்துள்ளது.
அதேபோல் பெரிய கோட்டை ஊராட்சியில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 29 ஆயிரத்தில் 8 வளர்ச்சி திட்ட பணிகளும், கோமையன்பட்டியில் ரூ.86 லட்சத்து 46 ஆயிரத்தில் 5 வளர்ச்சி திட்ட பணிகளும், வன்னியபட்டியில் ரூ.49 லட்சத்து 69 ஆயிரத்தில் 4 வளர்ச்சி திட்ட பணிகளும், நடுப்பட்டியில் ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்தில் 4 வளர்ச்சி திட்ட பணிகளும், குரும்பபட்டியில் ரூ.11 லட்சத்து 9 ஆயிரத்தில் 2 வளர்ச்சி திட்ட பணிகள் என மொத்தம் ரூ.7 கோடியே 17 லட்சத்து 41 ஆயிரத்தில் 58 வளர்ச்சி திட்ட பணிகள் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக் கும். அத்துடன் ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன், மாவட்ட கவுன்சிலர் முருகன், அகரம் பேரூராட்சி செயலாளர் சக்திவேல், சீலப்பாடி கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் மேகலா அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.