குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: கடைகளில் கண்காணிப்பு- ரகசிய கேமராக்களை பொருத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
கடைகளில் கண்காணிப்பு மற்றும் ரகசிய கேமராக்களை பொருத்த வேண்டும் என்று குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசினார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பகுதியில் செந்துறை, இரும்புலிக்குறிச்சி, குவாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நகைக்கடை, நகை அடகு கடை, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினருக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், செந்துறையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
செந்துறை பகுதியில் இயங்கி வரும் அனைத்து நகைக்கடை, நகை அடகு கடை, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து வர்த்தக கடைகளிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வெளியே பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை சாலையையும், கடைகளின் நுழைவு வாயிலையும் கண்காணிப்பது போல் அமைக்க வேண்டும். மேலும் ரகசிய கேமராக்களையும் பொருத்த வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்களை இரவு நேரங்களில் அணைத்து வைக்கக்கூடாது. தினமும் கேமராக்கள் சரியாக இயங்குகின்றதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அழிக்கப்படாமல் சேமித்து வைக்க வேண்டும். கடைகள் மற்றும் வங்கிகளில் இரவு நேர காவலாளிகளை உடனடியாக நியமித்து விழிப்புடன் இருக்க செய்ய வேண்டும். இரவு நேரங்களில் அவ்வப்போது கட்டிடத்தின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்ய வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் நோட்டம் விடுவது தெரியவந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். கட்டிடத்தின் முக்கிய இடங்களில் அலாரங்கள் பொருத்தப்பட வேண்டும். அலாரம் ஒலிக்கும்போது அதற்கான தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்போனில் தெரியும் வகையில் பொருத்த வேண்டும்.
நகைக்கடை, நகை அடகு கடை, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள சுவர், கதவு மற்றும் ஜன்னல்கள் உறுதியோடும் சரியான தரத்தில் இருக்கிறதா? என்றும் அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சாலைகளின் நான்கு புறங்களிலும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரங்களில் செயல்படும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிக பணம் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தீயணைப்பு சாதனங்கள் மற்றும் முதலுதவி பொருட்கள் அத்தியாவசியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட வழிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.