மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் - புதுவை, காரைக்காலில் நடந்தது
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை, காரைக்காலில் 8 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்தது.
அதன்படி புதுவை தலைமை தபால் நிலையம், உழவர்கரை, வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, தவளக்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய 8 இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் காங்கிரஸ்- தி.மு.க. மட்டுமின்றி கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வேளாண் சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
புதுவை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், பிரதேச குழு உறுப்பினர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உழவர்கரை நகராட்சியில் ராஜீவ்காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் (காங்), வெங்கடேசன் (தி.மு.க.) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் பெத்த பெருமாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சேது.செல்வம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாநில செயலாளர் பெருமாள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தவளக்குப்பத்தில் வைத்திலிங்கம் எம்.பி., தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரபுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகூர் மாதா கோவில் அருகில் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கலியமூர்த்தி பெருமாள், தமிழ்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
வில்லியனூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர்கள் ஏகாம்பரம், கண்ணபிரான், வட்டார காங்கிரஸ் தலைவர் அயூப்கான், செயலாளர்கள் செந்தில் குமரன், சம்பத், தொகுதி செயலாளர் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருக்கனூரில் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதகடிப்பட்டில் காமராஜர் நினைவு தூண் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கடேசன், மத்திய மாவட்ட துணைத்தலைவர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தனுசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தி.மு.க. பார்த்திபன், இந்திய கம்யூனிஸ்டு அந்தோணி ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சங்கர், உலக நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் தலைமை தபால் நிலையம் எதிரே தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.