பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறை சார்பில் பட்டரைப்பெருமந்தூர் ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரிக்கரையில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கரையோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசும்போது, முதல்-அமைச்சர் அவர்களால் குடிமராமத்து திட்ட பணிகளில் 4-வது கட்டமாக 80 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் வாயிலாக பணிகள் தொடங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.
ஏரியின் எல்லைப் பகுதிகளில் சமூக பணிக்குழு அறக் கட்டளை வாரியாக பனை விதைகள் விதைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது. இதில் முதற் கட்டமாக 500 பனை விதைகள் பட்டறை பெருமந்தூர் ஏரியில் நடப்பட உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏரிகளிலும் சுமார் 15 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.
அவருடன் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் ரமேஷ் சதீஷ்குமார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.