வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-09-28 23:00 GMT
நெல்லை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோன அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உடனே அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பகுதி செயலாளர் மணப்படை மணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், முத்துவளவன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஆதித்தமிழர் பேரவை செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் பஸ் நிறுத்தும் இடம் அருகில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் பேச்சிப்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆதித்தமிழர் பேரவை அமைப்பு செயலாளர் இளையராஜா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க நிர்வாகிகள் கணேஷ்குமார் ஆதித்தன், போர்வெல் கணேசன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதர்சன், காங்கிரஸ் வட்டார தலைவர் டியூக் துரைராஜ், நிர்வாகி காமராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ரமேஷ் அம்பேத்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண்மை திருத்த சட்ட மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தி.மு.க. நிர்வாகிகள் ஆவின் ஆறுமுகம், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன், ம.தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த முகமது அலி, நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன், சி.பி.ஐ. நகர செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். வர்த்தக அணி அமைப்பாளர் பண்ணை முருகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கைக்கொண்டார், நகர தலைவர் இசக்கி, ம.தி.மு.க. நகர செயலாளர் மசூது, ஒன்றிய துணை செயலாளர் கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிமுத்தாறு நகர தி.மு.க. சார்பில், ஆலடியூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர பொறுப்பாளர் முத்து கணேசன், காங்கிரஸ் நகர தலைவர் சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர தி.மு.க. பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு ராஜம்ஜான், நகர காங்கிரஸ் செயலாளர் செல்லத்துரை, ம.தி.மு.க. செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கண்ணன், முஸ்லீம் லீக் கானகத்திமீரான், நகர அவைத்தலைவர் அதியமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவந்திபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் பரணிசேகர், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்பிகா மாணிக்கம், பெருமாள், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கரநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ரவீந்திரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெள்ளப்பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. அணிகளின் துணை அமைப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் ஜான் கென்னடி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை எம்.பி. ஞானதிரவியம் தலைமை தாங்கினார். ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தனராஜ், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கல்யாணிகுமார், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், மாநில காங்கிரஸ் பொது செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு வழக்கறிஞர் சிங்கராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பரப்பாடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கட்சியை சேர்ந்த லிங்கேசன், சேகர், ஆரோக்கிய எட்வின், தாமஸ் அமிர்தராஜ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஜெஸ்கர்ராஜா, டபிள்யூ.ராஜசிங், அழகியநம்பி, செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மூலைக்கரைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் முருகையா, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் லெனின் பாரதி, நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் துரை அரசு, நகர ம.தி.மு.க. செயலாளர் வெள்ளதுரை, விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் இரணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேரன்மாதேவி தி.மு.க. நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், காங்கிரஸ் நகர தலைவர் பொன்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பிரேம், கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகி கமால் பாட்ஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட துணைத்தலைவர் காலேப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்டு பழனிசாமி, ம.தி.மு.க. வேலம்மாள், தாமஸ் ரிபாஸ், நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணான்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேரன்மாதேவி தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு தலைமை தாங்கினார். காங்கிரஸ் முன்னாள் இளைஞரணி மாவட்ட தலைவர் துரை, தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சாலமன் டேவிட், ம.தி.மு.க. தலைமை கழக மாநில செயலாளர் மலுக்காமலி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குட்டி பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், ஒன்றிய இளைஞரணி வானுமாமலை, வழக்கறிஞர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணகுடி தெற்கு மாட ரத வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக் ஜுட் தலைமை தாங்கினார். பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், காங்கிரஸ் நகர தலைவர் எட்வின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு உறுப்பினர் கதிரவன், ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் முருகன், விவசாயிகள் சங்க தலைவர் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்