தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் - குரும்பூரில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. குரும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
தென்திருப்பேரை,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குரும்பூர் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மண்டல செயலாளர் தமிழினியன், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் கருப்பன், மாவட்ட விவசாய சங்க தலைவர் ராமையா, ம.தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஒன்றிய பொருளாளர் பாதாள முத்து, சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜா, நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பரிசு முத்து, குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் ஜனகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
புதியம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, ஒன்றியச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் கே.பி.ஆறுமுகம், சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அழகு, காங்கிரஸ் நகர தலைவர் அர்ஜூனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், கனகரத்தினம், சித்ராதேவி, தெய்வராணி, ஜெயலட்சுமி, தி.மு.க. புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் சுகுமார், ஒன்றிய மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் குறுக்குச்சாலை மெயின் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை தலைவருமான காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. தேரடி திடல் முன்பு ஒன்றிய செயலாளரும், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் அன்புராஜ், செல்வராஜ், ம.தி.மு.க. மாநில தீர்மானக்குழு உறுப்பினர் யோகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், காங்கிரஸ் மாநில பேச்சாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் நகர தி.மு.க. செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் செளந்தரராஜன், ம.தி.மு.க. நகர செயலாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எட்டயபுரம் நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. நகர செயலாளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சேது, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கனகராஜ், த.மு.மு.க. நகர செயலாளர் இஸ்மாயில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கயத்தாறு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் நுட்ப பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விசுவநாதன்ராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வகுமார், காங்கிரஸ் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.