பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமனம் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் சி.டி.ரவி பரபரப்பு பேட்டி
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபையில் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சி.டி.ரவி. இவரை, நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமித்து பா.ஜனதா கட்சி உத்தரவிட்டுள்ளது. பா.ஜனதா கட்சியின் விதிமுறைப்படி ஒருவர், ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும். அதனால் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மந்திரிசபை விரிவாக்கம் செய்யும் வரை அவர் மந்திரி பதவியில் நீடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி சி.டி.ரவியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக என்னை நியமித்ததற்காக, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் மந்திரியாகவும் இருந்து வருகிறேன். பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறினால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கட்சி கூறும் கட்டளைப்படி நடந்து கொள்வேன். நான், கட்சியின் ஒழுக்கமான சிப்பாய் ஆவேன். கட்சி எப்போது சொல்கிறதோ, அடுத்த நிமிடமே மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக என்னை நியமித்து, பெரிய பொறுப்பை கட்சி வழங்கி உள்ளது. பா.ஜனதா கட்சியை வளர்க்கும் பொறுப்பு தற்போது என் மேல் உள்ளது. நான் மந்திரி ஆவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. சட்டசபை தேர்தலின் போது கூட எனக்கு சீட் கொடுக்கும்படி கேட்டதில்லை. கட்சி தான் முடிவு செய்து சீட் கொடுத்தது. அதன்படி, வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனேன். தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கும்படி கட்சி தலைவர்களிடம் கேட்கவில்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை திறம்பட நிர்வகிப்பேன். மாநிலத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.