ஜோலார்பேட்டை பகுதியில் பெண்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா - அம்மா உணவகம் மூடப்பட்டது

ஜோலார்பேட்டை பகுதியில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 2 பெண்கள் உள்பட 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அம்மா உணவகம் மூடப்பட்டது.

Update: 2020-09-26 22:30 GMT
ஜோலார்பேட்டை, 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பணியாற்றிய சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் மற்றும் சோலையூர் பகுதியை சேர்ந்த 45 பெண் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சந்தைக்கோடியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மூடப்பட்டது

மேலும் வக்கணம்பட்டி பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண், பழைய ஜோலார்பேட்டை பார்த்தசாரதி தெருவில் வசித்து வரும் 33 வயது ஆண், சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண் மற்றும் 32 வயது பெண், வாலாட்டியூர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் மற்றும் 15 வயது சிறுவன், ஆசிரியர் நகரை சேர்ந்த 70 வயது முதியவர், சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த 39 வயது பெண், ராமரெட்டியூர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், என்.ஜி.ஓ.நகர் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண், சின்னகவுண்டனூர் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண், ஹாயாத் நகர் பகுதியை சேர்ந்த 20 வயது ஆண் என நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து சுகாதாரதுறை சார்பில் அரசு டாக்டர் புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அம்மா உணவகத்தில் தொற்று ஏற்பட்ட 2 பேருடன் பணியாற்றி இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நகராட்சி அரசு பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 70 பேருக்கு சந்தைக்கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள பணியாளர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்