ஆதிச்சநல்லூரில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் பணி மும்முரம்
ஆதிச்சநல்லூரில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக 40 இடங்களில் பள்ளங்களை தோண்டி, அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம்,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லூர் பரும்பு, சிவகளை பரும்பு பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களை கண்டறிவதற்காக கால்வாய் ரோடு, வீரளபேரி, ஆதிச்சநல்லூர் ஊருக்குள்ளும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வரு கிறது. இதில் சுடுமண்ணாலான 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக 40 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய பகுதிகளில் வருகிற 30-ந்தேதிக்குள் அகழாய்வு பணிகளை நிறைவு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.
எனவே பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக 40 இடங்களில் பள்ளங்கள் தோண்டி அகழாய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.