லாரி - கார் மோதல் ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி கேரளாவை சேர்ந்தவர்கள்
எல்லாப்பூர் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மங்களூரு,
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரவி நாயர்(வயது 58). இவரது குடும்பத்தினர் புஷ்தா(55), ஹரீந்திரநாத்(52), பாதாம்ஸ்ரீ நாயர்(86) ஆகியோர் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவி நாயர், தனது குடும்பத்தினர் புஷ்தா, ஹரீந்திரநாத், பாதாம்ஸ்ரீ நாயர் ஆகியோருடன் மராட்டிய மாநிலம் மும்பைக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் மும்பையில் இருந்து கொச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை ரவி நாயர் ஓட்டி வந்தார். அவர்கள் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தாலுகா ஷராவதி வனப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே ஒசஹள்ளி கிராஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ரவி நாயரின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணித்து வந்த ரவி நாயர், புஷ்தா, ஹரீந்திரநாத், பாதாம்ஸ்ரீ ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எல்லாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவி நாயர் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கார்வாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.